அவதூறு வழக்கு: தீர்ப்பின்படி ஜானி டெப்பிற்கு 10.35 மில்லியன் வழங்க ஆம்பர் ஹேர்ட்டுக்கு ஆணை பிறப்பிப்பு

அவதூறு வழக்கில் ஜானி டெப்பிற்கு 10.35 மில்லியன் டாலர் வழங்கும்படி ஆம்பர் ஹேர்ட்டுக்கு அதிகாரப்பூர்வ ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவதூறு வழக்கு: தீர்ப்பின்படி ஜானி டெப்பிற்கு 10.35 மில்லியன் வழங்க ஆம்பர் ஹேர்ட்டுக்கு ஆணை பிறப்பிப்பு
Published on

வாஷிங்டன்,

பைரட்ஸ் ஆஃப் தி கரீபியன் திரைப்படங்கள் மூலம் உலக அளவில் பிரபலமானவர் நடிகர் ஜானி டெப். இவரது முன்னாள் மனைவி ஆம்பர் ஹேர்ட்டு. இதனிடையே, தனது முன்னாள் கணவர் ஜானி டெப் தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாகவும், குடும்ப வன்முறைக்கு உள்ளானதாகவும் இதற்கு உரிய நஷ்ட ஈடு வழங்கும்படியும் ஆம்பர் ஹேர்ட்டு கோர்ட்டில் வழக்குத்தொடர்ந்தார்.

அதேவேளை, தனது முன்னாள் மனைவி ஆம்பர் தனது பெயர், புகழுக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவதாகவும் இதற்கு இழப்பீடு வழங்கும்படியும் நடிகர் ஜானி டெப் கோர்ட்டில் வழக்குத்தொடர்ந்தார்.

இந்த வழக்கில் ஜானி டெப் வெற்றிபெற்றார். அதன்படி, கடந்த 1-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் அவதூறு பரப்பும் வகையில் பொய்யாக குற்றச்சாட்டுகளை முன் வைத்தற்காக ஆம்பர் தனது முன்னாள் கணவர் ஜானிக்கு இழப்பீடாக 78 கோடி ரூபாயும் (10 மில்லியன்), அபராதமாக 38 கோடி ரூபாயும் ( 5 மில்லியன்) என மொத்தம் 116 கோடி ரூபாய் (15 மில்லியன்) வழங்க வேண்டும் என கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது.

ஆனால், கோர்ட்டு அபராதம் விதிக்கும் உச்சபட்ச தொகை அளவு 2.71 கோடி ரூயாய் (35 ஆயிரம் டாலர்)என்பதால் அபராத தொகையான 5 மில்லியனுக்கு பதில் 35 ஆயிரம் டாலரை செலுத்த வேண்டும். இதன் மூலம் ஆம்பர் தனது முன்னாள் கணவர் ஜானி டெப்பிற்கு 80.31 கோடி ரூபாய் (10.35 மில்லியன் டாலர்) இழப்பீடாக கொடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், ஜானி டெப்பின் பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட இழப்பீட்டு தொகையான 10.35 மில்லியன் டாலரை செலுத்தும்படி ஆம்பர் ஹேர்ட்டிற்கு அதிகாரப்பூர்வ ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக எழுத்துப்பூர்வ உத்தரவை நீதிபதி இன்று பிறப்பித்துள்ளார்.    

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com