விவாகரத்து வழக்கு: 1 மில்லியன் தரேன்... வழக்கை முடித்து கொள்வதாக நடிகர் ஜானி டெப்பின் முன்னாள் மனைவி ஆம்பர் ஹெர்ட் அறிவிப்பு

ஹாலிவுட் நடிகர் ஜானி டெப்புக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கி வழக்குகளை முடித்து கொள்வதாக அவரது முன்னாள் மனைவி ஆம்பர் ஹெர்ட் அறிவித்துள்ளார்.
விவாகரத்து வழக்கு: 1 மில்லியன் தரேன்... வழக்கை முடித்து கொள்வதாக நடிகர் ஜானி டெப்பின் முன்னாள் மனைவி ஆம்பர் ஹெர்ட் அறிவிப்பு
Published on

நியூயார்க்,

ஹாலிவுட்டின் பிரபல 'பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்" திரைப்பட தொடரில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஜானி டெப். இவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அவரது முன்னாள் மனைவி ஆம்பர் ஹெர்ட், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இதற்கு ஜானி டெப் எதிர்ப்பு தெரிவித்து, தன் பெயருக்கு களங்கம் விளைவிக்கவே தன் மனைவி இப்படி வழக்குப் பதிவு செய்ததாக பதில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, ஜானி டெப் நிரபராதி என்றும் அவரது முன்னாள் மனைவியின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை எனக்கூறி தீர்ப்பு அளித்தது.

அத்துடன் ஜானி டெப் மீது அவதூறு பரப்பும் வகையில் பொய்க் குற்றச்சாட்டுகளை முன்வைத்தற்காக ஆம்பர் ஹெர்ட் நஷ்ட ஈடாக 78 கோடி ரூபாயும், அபராதமாக 38 கோடி ரூபாயுமாக மொத்தம் 116 கோடி ரூபாயை (15 மில்லியன்) ஜானி டெப்புக்கு வழங்க வேண்டும் என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.

இந்தநிலையில் ஹாலிவுட் நடிகர் ஜானி டெப்புக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கி வழக்குகளை முடித்துக்கொள்ளவதாக அவரது முன்னாள் மனைவி ஆம்பர் ஹெர்ட் அறிவித்துள்ளார்.

15 மில்லியன் நஷ்ட ஈடு செலுத்த உத்தரவிட்ட நிலையில் 1 மில்லியன் தான் (ரூ 8.28 கோடி) வழங்க முடியும் என்று ஆம்பர் ஹெர்ட் கூறியதை ஜானி டெப் தரப்பு ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com