

லூயிஸ்வில்லி,
அமெரிக்காவின் லூயிஸ்வில்லி நகரத்தில் உள்ள பழைய தேசிய வங்கியைக் குறிவைத்து இன்று மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினார். இதையடுத்து போலீசார் அந்த வங்கியை சுற்றி வளைத்து பதிலடி கொடுத்தனர்.
இந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். 8 பேர் காயமடைந்தனர். துப்பாக்கி சூடு நடத்திய நபரும் இறந்துவிட்டார். அந்த நபர் வங்கியின் முன்னாள் ஊழியராக இருக்கலாம் என தெரிகிறது. அந்த நபர் தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டானா? அல்லது அதிகாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டானா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
இச்சம்பவத்தால் வங்கிக் கட்டிடத்திற்கு வெளியே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்காக பிரார்த்தனை செய்யும்படி கவர்னர் ஆண்டி பெஷீர் கேட்டுக்கொண்டுள்ளார்.