

வாஷிங்டன்,
அமெரிக்க நாட்டின் முன்னாள் துணை ஜனாதிபதி வால்டர் மண்டேல் (வயது 93). இவர் ஜிம்மி கார்ட்டர் ஜனாதிபதியாக இருந்தபோது (1977-81) துணை ஜனாதிபதியாக இருந்தார். இவர் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். இவருக்கு வயது 93. இவர் 1984-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் ரொனால்டு ரீகனை எதிர்த்து நின்று தோல்வியைத் தழுவினார். இவருடைய மறைவுச்செய்தியை குடும்பத்தினர் முறைப்படி வெளியிட்டனர். இவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் வெளியிட்ட செய்தியில், அமெரிக்க நாட்டின் வரலாற்றில் மிகச்சிறந்த துணை ஜனாதிபதியாக வால்டர் மண்டேல் திகழ்ந்தார். அவர் எனது மதிப்புமிக்க கூட்டாளியாக திகழ்ந்தார். மின்னசோட்டா மற்றும் அமெரிக்கா மற்றும் உலக மக்களின் திறமையான ஊழியர். அவரது முன்மாதிரியான வாழ்க்கைக்கு நன்றி செலுத்துவதில் அனைத்து அமெரிக்கர்களுடன் நானும், மனைவி ரோசலினும் இணைகிறோம். அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கல்கள் என கூறி உள்ளார்.