சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து துபாய் நிலப்பரப்பை புகைப்படம் எடுத்து அனுப்பிய அமெரிக்க வீரர்

சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து அமெரிக்க விண்வெளி வீரர் ஷேன் கிம்ரூக் துபாய் நிலப்பரப்பை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து துபாய் நிலப்பரப்பை புகைப்படம் எடுத்து அனுப்பிய அமெரிக்க வீரர்
Published on

408 கி.மீ. உயரத்தில்

உலக அளவில் அமெரிக்காவின் நாசா, ஐரோப்பிய நாடுகளின் விண்வெளி ஏஜென்சி, ரஷியாவின் ரோஸ்காஸ்மோஸ் உள்ளிட்ட பல்வேறு நாட்டு விண்வெளி மையங்கள் கூட்டமைப்பில் கடந்த 1998-ம் ஆண்டு நவம்பர் மாதம் 20-ந் தேதி உருவாக்கப்பட்டதுதான் உலகை சுற்றி வரும் சர்வதேச விண்வெளி மையமாகும்.பூமியில் இருந்து சுமார் 408 கி.மீ. உயரத்தில் மணிக்கு 27 ஆயிரத்து 600 கி.மீ. வேகத்தில் வலம் வந்துகொண்டு இருக்கிறது. விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்தால் ஒரு நாளில் 16 முறை சூரியன் உதித்து மறைவதை காண முடியும்.விண்வெளி ஆராய்ச்சிக்காக பல்வேறு நாட்டு விண்வெளி வீரர்கள் தங்கி வருகின்றனர். அமீரகத்தின் சார்பில் முதல் விண்வெளி வீரரான ஹசா அல் மன்சூரியும் இங்கு சென்று வந்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

2 புகைப்படங்கள்

இந்த சர்வதேச விண்வெளி மையத்திற்கு கடந்த ஏப்ரல் 24-ந் தேதி அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தின் மூலம் சென்றடைந்த வீரர் ஷேன் கிம்ரூக் துபாயின் மீது செல்லும்போது தான் எடுத்த அழகிய 2 புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். முதல் படத்தில் பால்ம் ஜுமைரா பகுதியும், இரண்டாவது படத்தில் துபாய் சர்வதேச விமான நிலையம் உடைய புகைப்படத்தையும் அவர் எடுத்துள்ளார். அந்த பதிவில், ஹலோ துபாய் நான் துபாயின் 36 துளைகளுடைய கோல்ப் மைதானத்தை விண்வெளியில் இருந்து பார்த்து ரசித்தேன். பிரதேச அளவில் கடந்த 1988-ம் ஆண்டில் கட்டமைக்கப்பட்ட முதல் மைதானம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல துபாய் சர்வதேச விமான நிலையத்தையும் படம் பிடித்துள்ளேன். உலகின் பயணிகள் போக்குவரத்தில் மிகவும் பரபரப்பான விமான நிலையமாகும் என மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் கூறியுள்ளார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் இந்த 2 புகைப்படங்களும் அதிக லைக்குகளை பெற்றுள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com