இலங்கையில் அரசியல் அமைப்பு பின்பற்றப்பட வேண்டும்: அமெரிக்கா கருத்து

இலங்கையில் அரசியல் அமைப்பை அனைத்து கட்சிகளும் பின்பற்ற வேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இலங்கையில் அரசியல் அமைப்பு பின்பற்றப்பட வேண்டும்: அமெரிக்கா கருத்து
Published on

வாஷிங்டன்,

இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில், சிறிசேனாவின் இலங்கை சுதந்திரா கட்சியும், ரனில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து ஒற்றுமை அரசு என்ற பெயரில் 2015-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கூட்டணி அரசு அமைத்தன. பிரதமராக ரனில் விக்ரமசிங்கே பதவி ஏற்றார். இந்த சூழலில், சமீப காலமாக ரனில் விக்ரமசிங்கேவுக்கும், அதிபர் சிறிசேனாவுக்கும் இடையே மோதல் அதிகரித்தது.

கண்டி மாவட்டத்தில், புத்த மதத்தினருக்கும், இஸ்லாமியர்களுக்கும் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, பிரதமர் ரனிலிடம் இருந்து சட்டம்-ஒழுங்கு துறையை பறித்து அதிபர் உத்தரவிட்டார். கடந்த ஏப்ரல் மாதம், ரனில் விக்ரமசிங்கேவுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை சிறிசேனா ஆதரவு எம்.பி.க்கள் ஆதரித்தது விரிசலை உண்டாக்கியது.

இந்த பரபரப்பான சூழ் நிலையில், நேற்று இலங்கை அரசியலில் அதிரடி திருப்பம் ஏற்பட்டது. இலங்கை கூட்டணி அரசில் இருந்து விலகுவதாக சிறிசேனா தலைமையிலான சுதந்திரா கட்சி அறிவித்தது. அதைத்தொடர்ந்து, பிரதமர் பதவியில் இருந்து ரனில் விக்ரமசிங்கேயை சிறிசேனா நீக்கினார். இலங்கையின் புதிய பிரதமராக முன்னாள் அதிபர் ராஜபக்சேவை நியமித்தார். இந்த விவகாரம் சர்வதேச அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், இலங்கையில் ஏற்பட்ட திடீர் அரசியல் மாற்றம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம், இலங்கையின் அனைத்து கட்சிகளும், அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு நடப்பதோடு, வன்முறையை தவிர்க்க வேண்டும். ஜெனிவாவில் அளித்த வாக்குறுதிகளான மனித உரிமைகள், நாட்டின் சீர்திருத்தம், நீதி, சமரசம் ஆகியவற்றையும் இலங்கை நிலைநாட்டுவதை உறுதி செய்யும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com