தேர்தல்களில் வெளிநாட்டு அச்சுறுத்தல்... இந்தியா மீது கனடா முன்வைக்கும் புதிய குற்றச்சாட்டு

கனடாவின் பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு வெளியிட்டிருக்கும் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்த கனடா பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
Published on

கனடாவில் காலிஸ்தான் அமைப்பை சேர்ந்த தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 18-ம் தேதி கொல்லப்பட்டார். இந்திய அரசால் தேடப்படும் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டிருந்த அவர் கனடாவில் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலையில் இந்தியா சம்பந்தப்பட்டிருப்பதாக கனடா குற்றம்சாட்டியது. இந்த குற்றச்சாட்டை இந்sதியா மறுத்தது. இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், இரு நாடுகளுக்கிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், இந்தியாவை 'வெளிநாட்டு அச்சுறுத்தல்' என கனடா குற்றம்சாட்டியிருக்கிறது. இந்த குற்றச்சாட்டை கனடாவின் பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு வெளியிட்டிருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.

வெளிநாட்டு தலையீடு மற்றும் தேர்தல்கள் என்ற தலைப்பில் அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவை, தேர்தலில் தலையிடும் வெளிநாட்டு அச்சுறுத்தல் என்று குறிப்பிட்டுள்ளது. வெளிநாட்டு தலையீடு கனடாவின் ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த கனடா பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

தேர்தலில் இந்தியா தலையிடுவதாக கனடா குற்றம் சாட்டுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு, சீனா மற்றும் ரஷியா ஆகிய நாடுகள் மீதும் இதேபோன்ற குற்றச்சாட்டை கூறியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com