சிலியின் சாண்டியாகோவில் திடீர் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவு

சிலி நாட்டின் தலைநகர் சாண்டியாகோவில் நேற்று இரவு திடீரென பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
சிலியின் சாண்டியாகோவில் திடீர் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவு
Published on

சாண்டியாகோ,

சிலி நாட்டின் தலைநகர் சாண்டியாகோவில் நேற்று இரவு திடீரென பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று இரவு 11:03 மணியளவில் சாண்டியாகோ நகரின் தென்மேற்கே சுமார் 328 கிலோமீட்டர் தூரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. இதன் விளைவாக வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. மக்கள் பீதியால் அலறியபடி தங்களது வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் திரண்டு நின்றனர்.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக உடனடி தகவல் எதுவும் வெளியாகவில்லை.

X

Daily Thanthi
www.dailythanthi.com