ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு

ஆப்கானிஸ்தானில் காலை 9.40 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு
Published on

காபூல்,

ஆப்கானிஸ்தானில் இன்று காலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 9.40 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் டாலோகான் அருகே 180 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தபோதும் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் நேற்று 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com