பாகிஸ்தானில் மற்றொரு சம்பவம்; இந்து கோவிலை சுத்தியலால் அடித்து, உடைத்த மர்ம நபர்

பாகிஸ்தானில் இந்து கடவுள் சிலையை சுத்தியலால் அடித்து, உடைத்து கோவிலை சேதப்படுத்தி உள்ளனர்.
பாகிஸ்தானில் மற்றொரு சம்பவம்; இந்து கோவிலை சுத்தியலால் அடித்து, உடைத்த மர்ம நபர்
Published on

கராச்சி,

பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் இந்து மத கோவில் ஒன்று உள்ளது. இதில் ஜோக் மாயா என்ற பெண் கடவுள் சிலை உள்ளது. இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை மாலையில், மர்ம நபர் ஒருவர் கோவிலுக்குள் சுத்தியலுடன் நுழைந்து உள்ளார்.

அவர் சிலையை அடித்து, உடைத்ததுடன் கோவிலை சூறையாடி விட்டு சென்றுள்ளார். இந்த சம்பவம் பற்றி அறிந்த அந்த பகுதி மக்கள் அந்நபரை பிடித்து உள்ளூர் போலீசாரிடம் ஒப்படைத்து உள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு பா.ஜ.க. தலைவர் மன்ஜீந்தர் சிங் கண்டனம் தெரிவித்து உள்ளார். சிறுபான்மையினருக்கு எதிராக நடத்தப்படும் அரசு ஆதரவு பயங்கரவாத தாக்குதல் என்று குற்றச்சாட்டாகவும் கூறியுள்ளார்.

கடந்த அக்டோபரில் சிந்த் மாகாணத்தில் ஹனுமன் தேவி மாதா கோவிலை அடையாளம் தெரியாத கொள்ளை கும்பல் சூறையாடி விட்டு, அங்கிருந்த நகை மற்றும் ஆயிரக்கணக்கான பணம் ஆகியவற்றையும் கொள்ளையடித்து விட்டு சென்றுள்ளது.

இதுபோன்ற தாக்குதல் சம்பவங்களுக்காக, சர்வதேச சமூகம் ஆனது தொடர்ந்து பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com