ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டம்: 116 பேர் பலி; இணைய சேவை முடக்கம்

ஈரானின் பல்வேறு பகுதிகளிலும் இணையதள சேவை முடக்கி வைக்கப்பட்டு உள்ளது.
ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டம்: 116 பேர் பலி; இணைய சேவை முடக்கம்
Published on

தெஹ்ரான்,

ஈரான் நாட்டில் உச்சபட்ச தலைவராக அயோதுல்லா அலி காமேனி இருந்து வருகிறார். அந்நாட்டில் அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28-ந்தேதி தொடங்கியது. அதிகரித்து வரும் பணவீக்கம், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, பொருளாதார தேக்கநிலை ஆகியவற்றால் மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டு உள்ளது.

இதனால், அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடைந்து உள்ளது. மாகாணங்கள், நகரங்கள் என பல்வேறு பகுதிகளிலும் மக்கள் தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 2 வாரங்களாக நடந்து வரும் இந்த ஆர்ப்பாட்டம் இன்றும் நீடிக்கிறது.

அவர்களை ஒடுக்கவும், ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்கும் முயற்சியாகவும் பாதுகாப்பு படையினரை அரசு இறக்கி விட்டு உள்ளது. இதன்படி போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். ஈரானின் 31 மாகாணங்களில் 100 நகரங்களில் போராட்டம் தீவிரமடைந்து உள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இணையதள சேவை முடக்கி வைக்கப்பட்டு உள்ளது. இதனால், ஈரானில் நடப்பது என்ன என்பது பற்றி வெளியுலகிற்கு சரிவர தெரியாத வகையில் செய்திகளும் முடங்கி உள்ளன.

இதனால், தங்களுடைய நண்பர்கள், உறவினர்களுடன் மக்கள் தொடர்பு கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது. சில அரசு ஊடங்கள் மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. எனினும், ஈரானில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் 116 பேர் பலியாகி இருக்க கூடும் என அமெரிக்காவை அடிப்படையாக கொண்ட மனித உரிமைகள் அமைப்பு ஒன்று தெரிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com