தாய்லாந்தின் புதிய பிரதமராக அனுடின் தேர்வு

தாய்லாந்தின் புதிய பிரதமராக அனுடின் சார்ன்விரகுல் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
பாங்காக்,
தாய்லாந்து-கம்போடியா இடையேயான எல்லை மோதல் சமீபத்தில் மீண்டும் வெடித்தது. அப்போது கம்போடியா பிரதமர் ஹுன் சென்னுடன் தாய்லாந்து பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ரா சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தாய்லாந்து ராணுவ தளபதியை விமர்சித்ததாக பேடோங்டர்ன் மீது விமர்சனம் எழுந்தது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் பிரதமர் பதவியில் இருந்து பேடோங்டர்ன் நீக்கப்பட்டார்.
இதனையடுத்து புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. இதில் பூம்ஜைதாய் கட்சியின் தலைவர் அனுடின் சார்ன்விரகுல் மொத்தமுள்ள 492 வாக்குகளில் 311 வாக்குகளை பெற்றார். இதன்மூலம் தாய்லாந்தின் புதிய பிரதமராக அனுடின் சார்ன்விரகுல் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
Related Tags :
Next Story






