ஆப்பிள் இணை நிறுவனர் மருத்துவமனையில் அனுமதி

மெக்சிகோ சிட்டியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
ஆப்பிள் இணை நிறுவனர் மருத்துவமனையில் அனுமதி
Published on

மெக்சிகோ சிட்டி,

ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனரான ஸ்டீவ் வோஜ்னியாக்குக்கு (வயது 73) திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, மெக்சிகோ சிட்டியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவர் கொண்டு செல்லப்பட்டார்.

இதனை அமெரிக்காவில் இருந்து வெளிவரும் டி.எம்.இசட் என்ற செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. அவருக்கு ஸ்டிரோக் ஏற்பட்டிருக்க கூடும் என கூறப்படுகிறது. எனினும், தீவிர பாதிப்பு இல்லை என அவருடைய நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவர், மெக்சிகன் மாகாணத்தின் சான்டா பே பகுதியில் நடைபெற்ற உலக வர்த்தக கூட்டமைப்பின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க திட்டமிட்டிருந்த நிலையில், அவருடைய உடல்நலம் பாதிப்படைந்தது.

கடந்த 1976-ம் ஆண்டு ஸ்டீவ் ஜாப்ஸ் உடன் சேர்ந்து, ஆப்பிள் கம்ப்யூட்டர் என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை வோஜ்னியாக் தொடங்கினார். அதன்பின்னர் உலகம் முழுவதும் ஆப்பிள் தயாரிப்புகள் பிரபலமடைந்தன. லேப்டாப், டெஸ்க்டாப் கணினிகள் மற்றும் ஐபோன் மொபைல் போன்கள் உள்ளிட்டவை, அவற்றின் வடிவம் மற்றும் சிறப்பம்சங்களால், வாடிக்கையாளர்களை அதிகம் கவர்ந்தன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com