

உலகின் முன்னணி செல்போன் உற்பத்தி மற்றும் மென்பொருள் நிறுவனமாக ஆப்பிள் உள்ளது. மறுபுறம், தற்போதைய அசுர வளர்ச்சியான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் ஓபன் ஏ.ஐ. முன்னணி நிறுவனமாகத் திகழ்கிறது. தங்களுடைய சொந்த துறைகளில் ராட்சசர்களாக விளங்கும் இந்த இரு நிறுவனங்களும், தற்போது தங்களுக்கு முற்றிலும் புதிய துறைகளில் கால் பதிக்கப் போட்டி போட்டு வருகின்றன.அதாவது, ஆப்பிள் நிறுவனம் பிற நிறுவனங்களைச் சார்ந்து இருக்காமல் தன்னந்தனியாக ஒரு புதிய ஏ.ஐ. தொழில்நுட்பத்தை உருவாக்கி மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதேநேரம், ஓபன் ஏ.ஐ. நிறுவனம் இதுவரை இல்லாத வகையில் சொந்தமாக ஏ.ஐ. தொழில்நுட்பம் கொண்ட நுகர்வோர் சாதனங்களை உருவாக்கும் புதிய முயற்சியில் இறங்கியுள்ளது.
கலிபோர்னியா மாகாண கோர்ட்டில் ஓபன் ஏ.ஐ. நிறுவனம் மீது ஆப்பிள் நிறுவனம் பகீர் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளது. தங்களின் ரகசிய ஹார்டுவேர் வடிவமைப்புகள், தயாரிப்பு முறைகள், வினியோக உத்தி களை திருடி பயன்படுத்த முயன்றதாக குற்றஞ்சாட்டியது. ஆப்பிளில் இருந்து வெளியேறி ஓபன் ஏ.ஐ. நிறுவனத்தில் பணிபுரிவதற் காக நேர்காணலுக்கு வரும் தொழில்நுட்ப வல்லுனர்களிடம் நேரடியா கவே ஆப்பிளின் புதிய தயாரிப்புகளின் உண்மையான பாகங்களான பேட்டரிகள், லாஜிக் போர்டுகள் மற்றும் பின்புற கண்ணாடிகளை எடுத்து வருமாறு கட்டாயப்படுத்தியுள்ளதை ஆதாரத்துடன் தெரிவித்துள்ளது.
முன்னாள் ஆப்பிள் வடிவமைப்புத் தலைவர் ஜானி ஐவ் தொடங்கி தற் போது ஓபன் ஏ.ஐ நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் நிறுவனத்தின் மூல மாக ஓபன் ஏ.ஐ. ஒரு ரகசிய ஏ.ஐ. சாதனத்தை உருவாக்கி வருகிறது. அந்தச் சாதனங்கள் அனைத்தும் தங்களின் திருடப்பட்ட தொழில்நுட்பத் ? தால் உருவாக்கப்படுபவை என்பதால், அதற்கு ஆப்பிள் தடை கோரியுள் ளது. ஆப்பிளின் குற்றச்சாட்டுகளுக்கு ஓபன் ஏ.ஐ. நிறுவனம் மறுத்துள் ளது. அது வெளியிட்டுள்ள விளக்கத்தில், "மற்ற நிறுவனங்களின் வர்த்தக ரகசியங்களில் எங்களுக்கு எந்த விருப்பமும் இல்லை. நாங்கள் இந்த வழக்கை சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம்” என்று தெரிவித்துள்ளது.