ஆப்பிள் வாட்ச், ஏர்பாட்ஸ்: புதிய மாடல்களில் மிரள வைக்கும் வசதிகள்

ஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோ 3முன்பு வெளியான ஏர்பாட்ஸை விடவும் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
நியூயார்க்:
ஸ்மார்ட்வாட்ச் உலகில் புரட்சியை ஏற்படுத்திய ஆப்பிள், தற்போது ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11, ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 3, மற்றும் ஆப்பிள் வாட்ச் SE 3 ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய தலைமுறை ஸ்மார்ட்வாட்ச்களில் பல அதிநவீன அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11-இல், உயர் இரத்த அழுத்தத்தை கண்டறியும் வசதி இடம்பெற்றுள்ளது. 150 நாடுகளின் மருத்துவ ஒழுங்குமுறை ஒப்புதலுடன் அறிமுகமாகும் இந்த அம்சம், பயனர்களுக்கு உயர் இரத்த அழுத்தப் பிரச்சனைகளை அடையாளம் காண உதவுகிறது.
மேலும், ஸ்லீப் ஸ்கோர் எனப்படும் புதிய அம்சம், தூக்க நேரம், படுக்கும் நேர கட்டுப்பாடு, இடையூறு காரணங்கள் போன்றவற்றை பகுப்பாய்வு செய்து, முந்தைய மாடல்களை விட விரிவான தரவுகளை வழங்குகிறது.
விலை விவரம்:
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11 – ₹33,500
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11 ( – ₹36,000 முதல்
முன்பதிவு செப்டம்பர் 12 முதல் தொடங்கி, செப்டம்பர் 19 அன்று விற்பனைக்கு வரும்.
ஏர்பாட்ஸ் ப்ரோ 3
புதிய ஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோ 3, முந்தைய மாடலை விட அதிக வசதிகளுடன் அறிமுகமாகியுள்ளது. இதில் ANC (Active Noise Cancellation) அம்சம் மூலம் வெளிச் சத்தங்களை தடுப்பதுடன், இசை மற்றும் குரல் இன்னும் தெளிவாக கேட்க உதவுகிறது.
மேலும், நேரடி மொழிபெயர்ப்பு வசதியும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. தற்போது ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், போர்ச்சுகீஸ், ஸ்பானிஷ் ஆகிய மொழிகளை ஆதரிக்கிறது. இந்த ஆண்டுக்குள் மேலும் நான்கு மொழிகள் சேர்க்கப்பட உள்ளது.இதன் பேட்டரி ஆயுள் 12 மணி நேரம் நீடிக்கும். இந்தியாவில் இதன் விலை ₹22,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.






