வெள்ளை மாளிகையின் கொரோனா பணிகள் ஒருங்கிணைப்பளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் நியமனம்

வெள்ளை மாளிகையின் கொரோனா பணிகள் ஒருங்கிணைப்பளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் ஆஷிஷ் ஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வெள்ளை மாளிகையின் கொரோனா பணிகள் ஒருங்கிணைப்பளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் நியமனம்
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக பதவியேற்ற ஜோ பைடன், தனது நிர்வாகத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களுக்கு அதிக முன்னுரிமை கொடுத்து முக்கிய பதவிகளில் அமர்த்தி வருகிறார்.

அந்த வகையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கரான டாக்டர் ஆஷிஷ் ஜா, என்பவரை வெள்ளை மாளிகையின் கொரோனா கட்டுப்பாட்டு பணிகள் ஒருங்கிணைப்பாளராக ஜோ பைடன் நியமித்துள்ளார். கொரோனா தொற்றுக்கு எதிரான தேசிய அளவிலான தடுப்பு பணிகளை ஒருங்கிணைப்பதற்கு ஆஷிஷ் ஜா சரியான தேர்வாக இருப்பார் என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com