அர்ஜெண்டினாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியது

அர்ஜெண்டினாவில் நேற்று புதிதாக 6,057 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

லண்டன்,

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. இதனிடையே அர்ஜெண்டினாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று அங்கு அதிகரித்து வந்தநிலையில், தற்போது வைரஸ் பாதிப்பு சற்று குறைய தொடங்கி உள்ளது.

இந்நிலையில் தென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவில் கொரோனா பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது. அர்ஜெண்டினாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 6,057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அர்ஜெண்டினாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 20,21,553 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு ஒரேநாளில் மேலும் 159 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 50 ஆயிரத்து 188 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 18,20,965 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் தற்போது 1,50,400 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது அர்ஜெண்டினா 12-வது இடத்தில் உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com