இலங்கை இறுதிக்கட்ட போரில் ராணுவத்தினர் போர்க்குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் -முன்னாள் அதிபர் ராஜபக்சே ஒப்புதல்

இலங்கை இறுதிக்கட்ட போரின்போது போர்க்குற்ற நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டதாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே ஏற்றுக்கொண்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கை இறுதிக்கட்ட போரில் ராணுவத்தினர் போர்க்குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் -முன்னாள் அதிபர் ராஜபக்சே ஒப்புதல்
Published on

கொழும்பு

இலங்கையில் விடுதலைப்புலிகளுடனான இறுதிப் போரில் 70 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அப்போது அதிபராக இருந்த மகிந்த ராஜபக்சே மனிதாபிமான போரினை இராணுவத்தினர் முன்னெடுத்து வருகின்றனர். பொதுமக்கள் யாரும் கொல்லப்படவில்லை என தெரிவித்து வந்தார். இந்நிலையில் முதன்முறையாக இராணுவத்தினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது, மகிந்த ராஜபக்சே இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார். தமிழர் பகுதி மீது நடத்தப்பட்ட போர் முடிவடைந்து 10 வருடங்கள் ஆன நிலையில், இராணுவத்தினரின் போர்க்குற்றங்களை முதல் முதன்முறையாக ஏற்றுக் கொண்டுள்ளார்.

போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்த சமகால அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது. இராணுவத்தினரால் போர்குற்றம் நடந்தது என்பது உண்மை தான். அதேபோன்று விடுதலைப் புலிகளாலும் போர்க்குற்றங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இராணுவத்தினருக்கு மாத்திரம் தண்டனை வழங்க முடியாது. விடுதலைப் புலிகளுக்கும் அவ்வாறான தண்டனை வழங்க வேண்டும் என ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com