

ஹெல்சிங்கி:
நார்வேயில் அமெரிக்க ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 4 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர் .நார்வேயின் போடோ நகரின் தெற்கில் உள்ள பெயார்னில் நேட்டோ கூட்டுப்படை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது ஒரு விமானம் விபத்துக்குள்ளானது.
அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான அந்த விமானம் விழுந்து நொறுங்கியதில் அமெரிக்க வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.
விமான விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. மோசமான வானிலையே விபத்துக்கு காரணம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.