

லாஸ் ஏஞ்சல்ஸ்,
பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு சென்ற கார் விபத்திற்குள்ளாகி உள்ளது. அந்த விபத்து தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இன்று அதிகாலையில் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள அலன்போர்டு சாலையில் அர்னால்டு சென்ற காருக்கு முன்னதாக சென்ற இரு கார்கள் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதனால் பின்னாடி வந்த வாகனங்களும் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக நான்கு கார்கள் இந்த விபத்தில் அடுத்தடுத்து சிக்கின. இந்த நிலையில் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு பயணம் செய்த கார் ஒரு சிறிய காரின் மீது மோதி மேலே ஏறி நின்றது.
சீட் பெல்ட் அணிந்திருந்தால் அதிர்ஷ்டவசமாக அர்னால்டுக்கு எந்த பெரிய காயங்களும் ஏற்படவில்லை. இந்த விபத்தில் பெண் ஒருவருக்கு மட்டும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். விபத்தில் சிக்கிய பெண்ணை நேரில் சென்று அர்னால்டு சந்தித்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.