சீனாவில் கடும் நிலச்சரிவு: 100க்கும் மேற்பட்டோர் பலி

சீனாவில் சிச்சுவான் பகுதியில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
சீனாவில் கடும் நிலச்சரிவு: 100க்கும் மேற்பட்டோர் பலி
Published on

பெய்ஜிங்

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஷின்மோ என்ற கிராமத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. மலை அடிவாரத்தில் உள்ள அந்த கிராமத்தில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் 40 வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தன. இதில், அந்த வீடுகளில் வசித்து வந்த 100 க்கும் மேற்பட்டவர்கள் மண்ணில் புதைந்தனர். இவர்கள் அனைவரும் உயிரிழந்து இருக்க கூடும் என்று கூறப்படுகிறது. அப்பகுதியில் மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

கனமழை காலங்களில் சீனாவின் ஊரக பகுதிகளில் இது போன்ற நிலச்சரிவு என்பது வாடிக்கையாக ஒன்றாக உள்ளது. சீனாவின் மத்திய பகுதியில் உள்ள ஹுபே மாகாணத்தில் கடந்த ஜனவரியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் அங்குள்ள ஒரு விடுதி சிக்கியது. இதில் 12 பேர் பலியாகினர். இதேபோல், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஏற்பட்ட நிலச்சரிவில் 8 பேர் பலியாகினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com