

* வெனிசூலாவில் அரசுக்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களில் வன்முறை வெடித்துள்ளது. நேற்றுமுன்தினம் தலைநகர் கராக்கசில் நடந்த போராட்டத்தின் போது, நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் பலியானார். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
* ஒலியை விட வேகமாக செல்லும் 2 ஹைபர்சோனிக் ஏவுகணைகளை அமெரிக்க ராணுவம் தயாரித்து வருகிறது. இந்த ஏவுகணைகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முழுமையாக கட்டமைக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
* ஆப்கானிஸ்தானின் உருஸ்கான் மாகாணத்தில் திரின் கோட் நகரில் தலீபான் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து ஆப்கான் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. இதில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
* குவைத் நாட்டை சேர்ந்த 2 பேர், ஈரானின் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் இருவரையும் விடுதலை செய்துவிட்டதாக ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.