

* அமெரிக்கா, வியட்நாம் இடையிலான போரின் போது வியட்நாமின் ஹோ சி மின் நகரில் உள்ள காடுகளை அழித்து, அங்கு மறைந்து இருந்த எதிரிகளை கண்டுபிடிக்க அமெரிக்க படைகள் ஆரஞ்சு ரசாயனத்தை தெளித்தனர். இதில் அங்கு உள்ள பியென் ஹவோ விமான நிலையம் பெரும் சேதம் அடைந்தது. போர் முடிந்து ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு பிறகு சுமார் ரூ.1,270 கோடி செலவு செய்து அந்த விமான நிலையத்தை புனரமைக்கும் பணியை அமெரிக்கா தொடங்கி உள்ளது.