உலகைச்சுற்றி...

ஆப்கானிஸ்தானில் ராணுவவீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் 20 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர்.
உலகைச்சுற்றி...
Published on


* பாகிஸ்தானில் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துங்கவா ஆகிய மாகாணங்களில் கடந்த 2 நாட்களாக பேய் மழை கொட்டித்தீர்த்தது. அத்துடன் அசுர வேகத்தில் புழுதிப்புயலும் வீசியது. இதனால் அந்த 3 மாகாணங்களில் உள்ள பல்வேறு நகரங்கள் சின்னாபின்னமாகி உள்ளன. மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 26 பேர் உயிர் இழந்துள்ளனர்.

* ஆப்கானிஸ்தானில் கஜினி மாகாணத்தில் தலீபான் பயங்கரவாதிகளை குறிவைத்து, ராணுவவீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் 20 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். அவர்களின் பிடியில் இருந்த கிராமவாசிகள் 21 பேர் பத்திரமாக விடுவிக்கப்பட்டனர்.

* ஏமனில் நடந்து வரும் உள்நாட்டு போரில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக செயல்படும் சவுதி கூட்டுப்படையில் அமெரிக்க அங்கம்வகிப்பதை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தி அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் ஜனாதிபதி டிரம்ப் தனது ஓட்டு மறுப்புரிமை அதிகாரத்தை பயன்படுத்தி அந்த தீர்மானத்தை நிராகரித்து விட்டார்.

* தீ விபத்தில் சிக்கி உருக்குலைந்து போன நோட்ரே-டேம் தேவாலயம் 5 ஆண்டுகளுக்குள், ஏற்கனவே இருந்ததை விட மிகவும் அழகாக கட்டப்படும் என பிரான்ஸ் அதிபர் மெக்ரான் உறுதிபூண்டுள்ளார்.


Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com