

* ஈரானின் மேற்கு பகுதியில் கடந்த சில வாரங்களாக கொட்டி தீர்த்த கனமழையால் அங்குள்ள பல்வேறு நகரங்கள் மற்றும் கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. கடந்த 2 வாரத்தில் மட்டும் அங்கு மழை, வெள்ளத்துக்கு 57 பேர் பலியாகி இருக்கிறார்கள். சுமார் 500 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.
* தைவானில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.7 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடி தகவல்கள் இல்லை.
* மங்கோலியாவை சேர்ந்த அரசு ஊழியர்கள் உள்நாட்டிலும், அயல்நாடுகளிலும் சூதாட்ட விடுதிகளுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
* இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்குகரை பகுதியில் இஸ்ரேல் நாட்டு பெண் ஒருவரை கத்தியால் குத்திக்கொல்ல முயன்ற பாலஸ்தீன வாலிபரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர்.
* பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் சர்கோதா மாவட்டத்தில் உள்ள ஐஸ் தொழிற்சாலையில் திடீர் கியாஸ் கசிவு ஏற்பட்டது. இதனை சுவாசித்த குழந்தைகள் உள்பட 35 பேர் மயக்க நிலைக்கு சென்றனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.