

* அமெரிக்காவும், சீனாவும் முன் எப்போதும் இல்லாத வகையில் இணைந்து செயல்பட வேண்டும் என உலக நாடுகள் விரும்புவதாக அமெரிக்காவுக்கான சீனத்தூதர் குய் தியான்காய் கூறினார்.
* உலக வங்கியின் தலைவர் பதவிக்கு அமெரிக்க நிதித்துறை செயலாளரான டேவிட் மால்ப்சை ஜனாதிபதி டிரம்ப் பரிந்துரை செய்துள்ளார்.
* பாகிஸ்தானில் விளம்பர வணிகத்தை பெருக்குவதற்கான நடவடிக்கைகளை தகவல் தொடர்பு அமைச்சகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் தனது அலுவலகத்தை பாகிஸ்தானில் திறக்க வேண்டுமென அந்நாடு வலியுறுத்தி உள்ளது.
* உள்நாட்டு போர் காரணமாக பிற நாடுகளுக்கு அகதிகளாக சென்ற சிரிய மக்கள் நாடு திரும்ப தொடங்கி இருக்கிறார்கள். அந்தவகையில் கடந்த 24 மணி நேரத்தில் ஜோர்டான் மற்றும் லெபனான் நாடுகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் சிரியாவுக்கு திரும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
* வெனிசூலாவின் மூத்த ராணுவ அதிகாரிகள் அந்நாட்டின் இடைக் கால அதிபர் ஜூவான் குவைடோவுக்கு தங்களது ஆதரவை அளிக் கும் பட்சத்தில் அவர்கள் மீது அமெரிக்கா விதித்திருக்கும் தடைகள் நீக்கப்படும் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்தார்.