உலகைச் சுற்றி...

* ஆப்கானிஸ்தானில், பர்யாப் மாகாணத்தில் காஞ்சி என்ற இடத்தில் நேற்று முன்தினம் மதியம் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் சிக்கி 4 பெண்கள், 2 குழந்தைகள் பலியாகினர்.
உலகைச் சுற்றி...
Published on

* துருக்கியில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் 62 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் ஈராக் நாட்டினர் என தகவல்கள் கூறுகின்றன.

* ரஷியாவில் தூரக்கிழக்கு காபரோவ்ஸ்க் பிராந்தியத்தில், பனிச்சரிவு ஏற்பட்டது. அதில் 11 பேர் சிக்கிக்கொண்டனர். அவர்களில் 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டு விட்டனர். 7 பேர் கதி என்ன ஆனது என தெரியவில்லை.

* அமெரிக்காவில் நியூயார்க் நகரில் டைம்ஸ் சதுக்கத்தில் புத்தாண்டு கொண்டாட்ட பாதுகாப்புக்காக, அந்த நகர போலீஸ் துறை ஆளில்லா விமானங்களை ஈடுபடுத்த உள்ளது.

* ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படை வீரர்களை திரும்பப்பெற ஜனாதிபதி டிரம்ப் உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என வாஷிங்டன் வெள்ளை மாளிகை கூறுகிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து 7 ஆயிரம் வீரர்களை திரும்பப்பெற டிரம்ப் உத்தரவிட்டிருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது நினைவுகூரத்தக்கது.

* சீனாவின் யோங்டிங் மாவட்டத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார். 2 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதுதொடர்பாக நிலக்கரி சுரங்க உரிமையாளரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

* எகிப்து நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி செய்தவர்கள் மீது பாதுகாப்பு படைகள் நடத்திய அதிரடி தாக்குதல்களில் 40 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com