

* சீனாவின் உளவுத்துறை அமைப்பின் முன்னாள் தலைவர் மா ஜெயின் என்பவருக்கு ஊழல் வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கி கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
* மெக்சிகோவில் சாண்டா மாரியா டெல் ரியோ என்கிற இடத்தில் நடந்த பஸ் விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 14 பேர் காயம் அடைந்தனர்.
* அமெரிக்காவில் மிகவும் பாராட்டுதலுக்குரிய பெண் என்ற சிறப்பை முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா பெற்றுள்ளார். அதேபோல் மிகவும் பாராட்டுதலுக்குரிய ஆண் என்ற சிறப்பை ஒபாமா தொடர்ந்து 11வது ஆண்டாக தக்கவைத்துள்ளார்.
* மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான புர்க்கினா பாசோவில் போலீசாரை குறிவைத்து ஆயுதம் ஏந்திய குழுக்கள் நடத்திய தாக்குதலில் 10 போலீசார் கொல்லப்பட்டனர்.
* ஜோர்டான் வெளியுறவுத்துறை மந்திரி அய்மன் சபாதி நேற்று ரஷியா சென்றார். அங்கு அவர் சிரியா விவகாரம் குறித்து ரஷிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.