

* இத்தாலியின் தென் பகுதியில் மவுண்ட் எட்னா எரிமலை பகுதியில் அமைந்துள்ள சிசிலி தீவில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.8 புள்ளிகளாக பதிவானது. இதில் கட்டிடங்கள் சேதம் அடைந்தன. 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
* வங்காளதேசத்தில் தேர்தல் பிரசாரம் தொடங்கியதில் இருந்து ஆளும் அவாமி லீக் கட்சி தொண்டர்கள் 5 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 350க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் அந்தக் கட்சி கூறுகிறது.
* பாகிஸ்தான் முன்னாள் எம்.பி. சையத் அலி ராசா அபிடி, கராச்சியில் உள்ள அவரது வீட்டின் அருகே வைத்து அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர், முத்தாஹிடா காமி இயக்கம் என்ற கட்சியை சேர்ந்தவர் ஆவார்.
* சிரியா தலைநகர் டமாஸ்கஸ் அருகே நேற்று முன்தினம் இரவு இஸ்ரேல் வான்தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதலின்போது இஸ்ரேலின் ஏவுகணைகளை சிரியா வழிமறித்து அழித்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.