

* ஆப்கானிஸ்தானின் படாக்சான் மாகாணம் தராயம் மாவட்டத்தில் தலீபான் பயங்கரவாத அமைப்பின் தளபதி உள்பட 6 பயங்கரவாதிகள் சண்டையை கைவிட்டுவிட்டு அரசின் அமைதி செயல்பாட்டில் இணைந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
* சிரியாவின் அலெப்போ, லடாக்கியா மற்றும் ஹமா ஆகிய மாகாணங்களில் பல்வேறு முக்கிய நகரங்களில் பயங்கரவாதிகள் தொடர்ந்து பீரங்கி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருவதாக ரஷிய ராணுவம் தெரிவித்தது.
* சிரியாவில் இருந்து அமெரிக்க படைகளை திரும்பப்பெறும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் முடிவு குறித்து கருத்து தெரிவித்த பிரான்ஸ் அதிபர் மெக்ரான் நட்பு என்பது நம்பகத்தன்மை உடன் இருக்க வேண்டும் என கூறினார்.
* பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா முகமது குரேஷி ஆப்கானிஸ்தானுக்கு அரசு முறை பயணமாக சென்றார். அங்கு அவர் ஆப்கான் அதிகாரிகளுடன் இரு நாட்டு உறவு குறித்து ஆலோசனை நடத்துகிறார்.
* ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஆகியோரின் சந்திப்பு எப்போது, எங்கு நடக்கும் என்பதை கூறுவது கடினம் என ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் கூறினார்.