

* அமெரிக்காவின் எச்-1பி விசாவுக்கு விண்ணப்பம் செய்வோரில் மிகச்சிறப்பானவர்களைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும், இந்த விசாக்களால் உள்நாட்டு பணியாளர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு முயற்சி எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் வலியுறுத்தி உள்ளது.
* ஆப்கானிஸ்தானில் பைசாபாத் போலீஸ் சோதனை சாவடியில் தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதைத் தொடர்ந்து அங்கு பணியில் இருந்த படை வீரர்கள் 10 பேரை கடத்திச்சென்றனர்.
* இங்கிலாந்தின் 2-வது மிகப்பெரிய விமான நிலையமான காட்விக் விமான நிலையம் அமைந்துள்ள பகுதியில், வானில் ஆளில்லா விமானங்கள் தென்பட்டதைத் தொடர்ந்து அந்த விமான நிலையம் மூடப்பட்டது. 32 மணி நேர மூடலுக்கு பின்னர் இப்போது அந்த விமான நிலையம் மீண்டும் செயல்படத்தொடங்கி உள்ளது. இதன் காரணமாக 1 லட்சத்து 10 ஆயிரம் பயணிகள் பாதிப்புக்கு ஆளாகினர்.
* செக் குடியரசில் கார்வினா நகரில் நிலச்சுரங்கம் ஒன்றில் மீத்தேன் வாயு கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 13 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
* தென்சீனக்கடல் பிரச்சினை தொடர்பாக வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோவும், பிலிப்பைன்ஸ் வெளியுறவு மந்திரி டியோடரா லாக்சின் ஜூனியரும் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
* பாகிஸ்தான் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ஷாபர்ஸ் ஷெரீப், பொதுக்கணக்கு குழு தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.