

* சிரியாவின் டெயிர் இ ஜோர் மாகாணத்தில் ஹாஜின் நகரில் அமெரிக்க கூட்டுப்படைகள் தடை செய்யப்பட்ட வெள்ளை பாஸ்பரஸ் கொண்டு தாக்குதல் நடத்தியதாகவும், அதில் அப்பாவி மக்கள் பலியாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
* ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், நேற்று முன்தினம் மத தலைவர்கள் பங்கேற்ற ஒரு கூட்டத்தை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல் நடந்தது. இதில் 55 பேர் உயிரிழந்தனர்.
* வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் ஆலோசகராக உள்ள இவான்கா டிரம்ப், தன் சொந்த மின் அஞ்சல் முகவரி வழியாக அலுவலக கடிதங்களை அனுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் இதில் மகள் இவான்கா டிரம்பை பாதுகாக்கும் வகையில் ஜனாதிபதி டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். இவான்கா அனுப்பிய மின் அஞ்சல்களில் ரகசிய தகவல் ஏதுமில்லை, தவிரவும் அது அழிக்கப்பட்டு விடவில்லை எனவும் அவர் கூறி உள்ளார்.
* சீனாவின் ஹூனான் மாகாணத்தில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் தாக்கி உள்ளதாக அந்த நாட்டின் விவசாயம் மற்றும் உள்ளூர் விவகாரங்கள் துறை அமைச்சகம் கூறுகிறது.