* வடகொரியா உடனான சமாதான நிலைப்பாட்டை கருத்தில் கொண்டு, கொரிய எல்லையில் அமெரிக்க மற்றும் தென்கொரிய படைகள் இணைந்து நடத்தும் போர் ஒத்திகை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் கடற்படைகள் நேற்று போர் ஒத்திகையை மீண்டும் தொடங்கின.