உலகை சுற்றி...

துருக்கி நாட்டின் தென் மத்திய பகுதியில் அமைந்துள்ள அதியமான் மாகாணத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
உலகை சுற்றி...
Published on

* துருக்கி நாட்டின் தென் மத்திய பகுதியில் அமைந்துள்ள அதியமான் மாகாணத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.5 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.

* பொலிவியா நாட்டில் எரிசக்தித் துறை மந்திரியாக இருந்து வரும் அல்வாரோ ரோட்ரிகோ குஸ்மானுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

* அமெரிக்காவில் நடப்பு ஆண்டின் இறுதி 6 மாதங்களுக்கான கடன் மதிப்பீடுகளில் கொரோனா நிவாரண நிதிக்காக 1 டிரில்லியன் டாலரை( இந்திய மதிப்பில் சுமார் ரூ.75 லட்சம் கோடி) ஒதுக்கீடு செய்யும் மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கும் என அமெரிக்க நிதித்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

* ரஷியாவில் சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசி இந்த ஆண்டு இறுதிக்குள் தயாராக வாய்ப்பில்லை என தடுப்பூசி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள பயோடெக் ஆய்வு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

* அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தை இசையாஸ் என்கிற சக்தி வாய்ந்த புயல் அச்சுறுத்தி வருகிறது. இந்தப் புயல் காரணமாக அந்த மாகாணத்தில் இடைவிடாமல் கனமழை கொட்டி வருகிறது.

* ஜப்பானின் ஆளும் தாராளவாத ஜனநாயகக் கட்சியின் நிபுணர் கவுன்சில், நாட்டின் ஏவுகணை தாக்குதல்களை நிறுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பரிசீலிக்குமாறு அரசுக்கு ஒரு முன்மொழிவை சமர்ப்பித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com