உலகைச் சுற்றி...

சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி துருக்கியில் மாயமான விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.
உலகைச் சுற்றி...
Published on

* சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி துருக்கியில் மாயமான விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், இது தொடர்பாக துருக்கி அதிபர் தாயீப் எர்டோகனை, சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல்ஆசிஸ் அல் சவுத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க இரு நாடுகள் சார்பில் கூட்டுவிசாரணை குழுவை அமைப்பதின் முக்கியத்துவம் குறித்து இருவரும் கலந்தாலோசித்தனர்.

* அமெரிக்காவை சேர்ந்த லாரா (வயது 22) என்கிற பெண் கல்வி விசாவில் கடந்த மாதம் 2-ந் தேதி இஸ்ரேல் சென்றார். ஆனால் அவர் இஸ்ரேலுக்குள் நுழைய தடைவிதித்த அந்நாட்டு அரசு அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்த முடிவு செய்தது. அரசின் இந்த முடிவை எதிர்த்து லாரா அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அதனை ஏற்று லாராவை நாடு கடத்தும் முடிவை நிறுத்தி வைத்த சுப்ரீம் கோர்ட்டு அவரது மனு மீது இந்த வாரத்துக்குள் விசாரணை நடத்தப்படும் என அறிவித்தது.

* ஈரானில் எண்ணெய் ஏற்றுமதிக்கு எதிராக அமெரிக்கா விதித்து இருக்கும் பொருளாதார தடைகளால் நாட்டின் பொருளாதாரத்துக்கோ மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கோ எந்த வித பாதிப்பும் ஏற்படாது என அந்நாட்டின் அதிபர் ஹசன் ருஹானி தெரிவித்துள்ளார்.

* சோமாலியாவில் கடந்த ஆண்டு அக்டோபர் 14-ந் தேதி தலைநகர் மொகாதீசுவில் உள்ள சந்தைப்பகுதியில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 600 கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் நடந்து சரியாக ஓர் ஆண்டு நிறைவுற்ற நிலையில் தாக்குதலில் தொடர்புடைய ஹாசன் ஆடன் இசாக் என்ற குற்றவாளிக்கு நேற்று முன்தினம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com