

* ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாகாணத்தில் தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் நேற்று தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் உடலில் வெடிகுண்டுகளை கட்டி வந்து வெடிக்கச் செய்தார். இந்த குண்டுவெடிப்பில் 7 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
* தென்சீனக்கடலில் சர்ச்சைக்குரிய பகுதி அருகே அமெரிக்காவின் நாசகார போர்க்கப்பல் யு.எஸ்.எஸ். டிகாட்டர் பயணம் மேற்கொண்டது. அதை சீன போர் கப்பல் நெருங்கியதால் பதற்றம் ஏற்பட்டது. அமெரிக்க போர்க்கப்பலை எச்சரிக்கத்தான் சீன போர்க்கப்பல் அதை நெருங்கியதாக தகவல்கள் கூறுகின்றன.
* இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தள சேவை நிறுவனத்தின் இணை நிறுவனர்கள் கெவின் சிஸ்ட்ரோம், மைக் கிரீகர் கடந்த வாரம் திடீரென பதவி விலகினர். இதையடுத்து அதன் தலைவராக ஆதம் மோசரி தலைமை பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதுவரை அந்த நிறுவனத்தின் துணைத்தலைவராக இருந்து வந்தார்.
* ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலுடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தொலைபேசியில் பேசினார். அப்போது அவர், ஆப்கானிஸ்தான் விவகாரம், இந்தியாவுடனான உறவு உள்ளிட்ட பல விஷயங்களை விவாதித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.