உலகைச் சுற்றி...

பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜாவத் பஜ்வா 3 நாள் பயணமாக சீனா சென்றுள்ளார்.
உலகைச் சுற்றி...
Published on

* பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜாவத் பஜ்வா 3 நாள் பயணமாக சீனா சென்றுள்ளார். இம்ரான்கான் பிரதமராக பதவி ஏற்றுக்கொண்ட பின்னர் பாகிஸ்தானின் மூத்த அதிகாரி ஒருவர் அதன் நட்பு நாடான சீனாவுக்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறை ஆகும்.

* சர்ச்சைக்குரிய தென்சீன கடல் பகுதியில் ஜப்பான் கடற்படை ஒத்திகை நடத்தியது. இதில் முதல் முறையாக ஜப்பானின் நீர்மூழ்கி கப்பல் பங்கேற்றது.

* இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ இந்தியாவுக்கான தங்கள் நாட்டின் தூதராக ரோன் மல்காவை நியமனம் செய்து உள்ளார். ரோன் மல்கா சட்டம் மற்றும் வர்த்தக கல்லூரியின் மூத்த பேராசிரியர் உள்பட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

* அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்பின் நிர்வாகம் தங்கள் நாட்டுடன் முறையற்ற அணுகுமுறையை கடைபிடிப்பதாகவும், அந்த போக்கை கைவிட்டு சமமாக நடத்தும் வரை அந்நாட்டுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே கிடையாது என்றும் கியூபா அதிபர் மிகுவேல் டயாஸ் கனல் தெரிவித்துள்ளார்.

* அமெரிக்காவின் நியூயார்க் நகரை மையமாக கொண்டு வெளிவரும் பிரபல டைம் வாரப்பத்திரிகை நிறுவனத்தை, சேல்ஸ்போர்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் மார்க் பெனியாப் 190 மில்லியன் டாலருக்கு (சுமார் ரூ.1,360 கோடி) வாங்கி உள்ளார். இந்த பத்திரிகையை நடத்தி வந்த மெரிடித் நிறுவனம், இந்த ஆண்டு தொடக்கத்தில்தான் அதை வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com