

* மியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் விவகாரம் தொடர்பாக செய்திகள் வெளியிட்ட ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன ஊழியர்கள் இருவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடந்த டிசம்பர் மாதம் போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணையில் அவர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தை மீறியது நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
* பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ துதர்தே, கடந்த 2016-ம் ஆண்டு அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவை மிகவும் கொச்சையான வார்த்தையால் திட்டினார். இதனால் இரு நாடுகள் இடையே உறவில் விரிசல் ஏற்பட்டது. இப்போது டிரம்ப் ஆட்சியில் நிலைமை மாறிவிட்டது. இதனால் 2 ஆண்டுகளுக்கு பிறகு ஒபாமாவிடம் ரோட்ரிகோ துதர்தே மன்னிப்பு கோரி உள்ளார்.
* சீனா தாங்கள் நாட்டின் கடற்பரப்பிலும், வான் பரப்பிலும் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், இதனால் தங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் ஜப்பான் கவலை தெரிவித்துள்ளது.
* பிலிப்பைன்ஸ் நாட்டின் சுல்தான் குடரத் மாகாணத்தில் உள்ள இசுலான் நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்த குண்டுவெடிப்பில் சிக்கி ஒருவர் உயிர் இழந்தார். 15 பேர் படுகாயம் அடைந்தனர். இதே பகுதியில் கடந்த மாதம் 28-ந் தேதி நடந்த ஒரு குண்டுவெடிப்பில் 3 பேர் பலியானதும், 30 பேர் படுகாயம் அடைந்ததும் நினைவுகூரத்தக்கது.