உலகைச் சுற்றி...

* பாலஸ்தீனத்தை இறையாண்மை கொண்ட தனி நாடாக கொலம்பியா அங்கீகரித்து உள்ளது.
உலகைச் சுற்றி...
Published on

* ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் குழந்தைகளை ஏற்றிச்சென்ற ஒரு பஸ் மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சில குழந்தைகள் பலியாகி உள்ளனர். பல குழந்தைகள் படுகாயம் அடைந்து உள்ளனர். இதை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்து உள்ளது.

* தெற்கு சூடானில் உள்நாட்டுப்போரில் ஈடுபட்ட கிளர்ச்சியாளர்களின் தலைவர் ரியெக் மச்சார் உள்ளிட்ட அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கி அதிபர் சல்வா கீர் உத்தரவிட்டு உள்ளார்.

* அமெரிக்காவில் கடந்த திங்கட்கிழமையன்று 71 வயதான சீக்கியர் ஒருவர் 2 பேரால் இரும்பு கம்பி கொண்டு கொடூரமான முறையில் தாக்கப்பட்டார். இது வழிப்பறி கொள்ளை முயற்சியில் நடந்ததாக இப்போது தெரிய வந்து உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கலிபோர்னியா மாகாண போலீஸ் அதிகாரி டேரில் மெக் அலிஸ்டர் மகன் டைரோன் மெக் அலிஸ்டர் (18) மற்றும் 16 வயது சிறுவர் ஒருவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

* இங்கிலாந்து நாட்டில் முன்னாள் ரஷிய உளவாளி செர்கெய் ஸ்கிரிபால், அவரது மகள் யூலியா ஆகியோர் சில மாதங்களுக்கு முன்னர் நச்சு தாக்குதலுக்கு ஆளாகி இப்போது மீண்டு உள்ளனர். அவர்கள் தாக்கப்பட்டதற்கு ரஷியா தான் காரணம் என புகார் எழுந்து உள்ளது. அவர்கள் நரம்பு மண்டலத்தை முடக்கி விடுகிற நோவிசோக் என்ற நச்சுப்பொருளால்தான் தாக்கப்பட்டனர் என்பது உறுதிபடுத்தப்பட்டால் ரஷியா மீது புதிய பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்து உள்ளது.

* சிலி நாட்டில் 2 முறை அதிபர் பதவி வகித்த மிச்செல்லி என்ற பெண் தலைவரை ஐ.நா. மகளிர் உரிமை அமைப்பின் அடுத்த தலைவராக நியமித்து ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் அறிவித்து இருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com