

* வங்காளதேசத்தில், பேனி மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரு ஆட்டோ ரிக்ஷா மீது பஸ் மோதி விபத்து நேரிட்டது. இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தனர்.
* சவுதி அரேபியாவில் ரியாத் நகரில் உள்ள காசிர் அல் ஹாகிம் அரண்மனையின் முன் போராட்டம் நடத்த முயன்றதாக 11 இளவரசர்கள் கைது செய்யப்பட்டிருப்பதை அந்த நாட்டின் அரசு தலைமை வக்கீல் உறுதி செய்து உள்ளார். அவர்கள் சட்டப்படியான விசாரணையை எதிர்கொள்வார்கள் என்றும் அவர் அறிவித்து உள்ளார்.
* பாகிஸ்தான் தலைவர்கள் வெளிநாடுகளில் கருப்பு பண பதுக்கலில் ஈடுபடாமல் இருந்திருந்தால், அமெரிக்காவின் ராணுவ நிதி உதவி நிறுத்தம் நாட்டுக்கு ஒரு நெருக்கடியாக அமைந்திருக்காது என்று தெக்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான்கான் கருத்து தெரிவித்துள்ளார்.
* ஈரான் நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றதாக பல்கலைக்கழக மாணவர்கள் 90 பேர் உள்பட 1000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
* அமெரிக்க விண்வெளி வீரர் ஜான் யெங் (வயது 87) மரணம் அடைந்தார். இவர் நிலவுக்கு 2 முறை சென்று வந்தார். அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு நாசாவின் விண்வெளி திட்டங்களில் முன்னோடியாகவும் செயல்பட்டவர் ஆவார்.