உலகைச் சுற்றி...

ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி, சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
உலகைச் சுற்றி...
Published on

* ஊழல் வழக்கில், கைது நடவடிக்கைக்கு பயந்து அமெரிக்காவுக்கு தப்பியோடிய பெரு நாட்டின் முன்னாள் அதிபர் அலெஜாண்ட்ரோ டொலிடோவை அமெரிக்க போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவரை பெருவுக்கு நாடு கடத்தும் முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

* அமெரிக்கா வரும் அகதிகளுக்கு புதிய கட்டுப்பாட்டுகளை விதித்தது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் நிர்வாகத்துக்கு எதிராக மனித உரிமை ஆர்வலர்கள் அமைப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளது.

* ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி, சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது பயங்கரவாத ஒழிப்பில் இருநாடுகளின் ஒத்துழைப்பு உள்பட இரு தரப்பு உறவு குறித்து தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.

* அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணை பாதுகாப்பு தொகுப்புகளை துருக்கி வாங்கியதால், அமெரிக்கா இனி அந்த நாட்டுக்கு எப்-35 ரக போர் விமானங்களை விற்பனை செய்யாது என ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். அதே சமயம் துருக்கி உடனான உறவு சிறப்பாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com