உலகைச் சுற்றி...

* நேபாளத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது. இந்த பேரழிவில் இருந்து மீண்டுவர தங்களுக்கும் உதவும்படி சர்வதேச அமைப்புகளுக்கு நேபாள அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
உலகைச் சுற்றி...
Published on

* ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவில் உள்ள பர்ஸ்கயா கிராமத்தில் பறந்துகொண்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்று திடீரென தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் ஹெலிகாப்டரில் இருந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

* தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா தன் மீதான ஊழல் வழக்கு விசாரணைக்கு, முதல் முறையாக நீதிபதி முன்பு ஆஜரானார். அப்போது தன் மீதான குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்த அவர், இது தனக்கு எதிராக பின்னப்பட்ட சதி என்றும், தன்னை இழிவுபடுத்தும் செயல் என்றும் கூறினார்.

* சிரியாவில் அரசு படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் அலெப்போவில் பயங்கரவாதிகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 6 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com