உலகைச்சுற்றி...

* எகிப்து நாட்டில் செங்கடல் பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா தலம் ஒன்றில் நேற்று முன்தினம் ஜெர்மனி பெண்கள் 2 பேர், எகிப்தியர் ஒருவரால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டனர்.
உலகைச்சுற்றி...
Published on

* எகிப்து நாட்டில் செங்கடல் பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா தலம் ஒன்றில் நேற்று முன்தினம் ஜெர்மனி பெண்கள் 2 பேர், எகிப்தியர் ஒருவரால் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டனர். இது வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை குறிவைத்து, வேண்டுமென்றே திட்டமிட்டு நடத்திய தாக்குதல் என்று ஜெர்மனி அதிருப்தி வெளியிட்டுள்ளது.

* சீன மனித உரிமை காவலர் சூ ஜியாங், 4 ஆண்டு காலம் சிறைத்தண்டனை அனுபவித்த நிலையில் விடுதலை செய்யப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் இனி சுதந்திரப்பறவையாக வாழ வழி பிறந்துள்ளதாக அவரது வக்கீல் கூறினார்.

* 6 நாட்டினர் அமெரிக்காவில் நுழைய தடை விதித்து டிரம்ப் நிர்வாகம் பிறப்பித்த உத்தரவில், அமெரிக்காவில் உள்ளவர்களின் ரத்த சம்மந்தமான குடும்ப உறவினர்கள் வரலாம் என விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இந்த உறவுப்பட்டியலில் தாத்தா, பாட்டி போன்ற உறவுகளுக்கு இடம் இல்லை. ஆனால் இது தொடர்பான வழக்கை விசாரித்த அமெரிக்க மாவட்ட நீதிபதி டெரிக் வாட்சன், டிரம்ப் நிர்வாகம் பிறப்பித்த கட்டுப்பாடுகளை தளர்த்தியது. தாத்தா, பாட்டி உள்ளிட்ட குடும்ப உறவினர்களும் அமெரிக்கா வர அனுமதி அளித்தது. இந்த உத்தரவை எதிர்த்து டிரம்ப் நிர்வாகம், அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.

* ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் ஏற்பட்டுள்ள காலி இடத்தை நிரப்புவதற்கு ஆஸ்திரேலியா தயார் ஆவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

* சீன அதிபர் ஜின்பிங்கின் நம்பிக்கைக்கு பாத்திரமான வளர்ந்து வரும் அரசியல் நட்சத்திரம் சென் மைனர், சோங்கிங் மாகாண கம்யூனிஸ்டு கட்சியின் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com