உலகைச்சுற்றி...

பனாமா நாட்டின் மேற்கு பகுதியில் லா எஸடபெரன்சா நகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது.
உலகைச்சுற்றி...
Published on


* பனாமா நாட்டின் மேற்கு பகுதியில் லா எஸடபெரன்சா நகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.

* ஈராக்கின் கிர்குக் மாகாணத்தில் உள்ள அல் ராசாத் நகரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, சாலையோரம் புதைத்து வைத்திருந்த வெடிகுண்டை ரிமோட் மூலம் பயங்கரவாதிகள் வெடிக்க செய்தனர். இதில் 5 போலீசார் உடல் சிதறி உயிர் இழந்தனர்.

* ஈரான் எந்த சூழ்நிலையிலும், எவ்வித நிபந்தனைகளின் பேரிலும் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து மறுபரிசீலனை செய்யாது என அந்நாட்டின் அதிபர் ஹசன் ருஹானி தெரிவித்தார்.

* ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள சிங்ளேடோன் நகரில் ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 சிறுமிகள், ஒரு சிறுவன் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிர் இழந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com