

* ஜப்பானில் அடுத்த வாரம் நடைபெறும் ஜி-20 மாநாட்டுக்கு மத்தியில் ஜனாதிபதி டிரம்ப், ரஷிய அதிபர் புதினை சந்தித்து பேச இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரான் விவகாரம், உக்ரைன் மற்றும் சிரியா பிரச்சினை குறித்து இருநாட்டு தலைவர்களும் தீவிர ஆலோசனை நடத்துவார்கள் என தெரிகிறது.
* கஜகஸ்தான் நாட்டின் துர்கிஸ்தான் பிராந்தியத்தில் அர்ஸ் நகரில் உள்ள ராணுவ ஆயுத கிடங்கில் பயங்கர வெடிவிபத்து நேரிட்டது. இதில் ஒருவர் பலியானார். 15 பேர் பலத்த காயம் அடைந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர்.
* அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் 2 நாள் அரசு முறை சுற்று பயணமாக அடுத்த வாரம் தென்கொரியாவுக்கு செல்கிறார். டிரம்பின் இந்த பயணத்துக்கு முன்பாக தென்கொரியா-வடகொரியா இடையே 4-வது உச்சிமாநாடு நடத்தி முடிக்கப்பட வேண்டும் தென்கொரியா விருப்பம் தெரிவித்துள்ளது.