

* ஏமன் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள துறைமுக நகரான ஏடனில் உள்ள விளையாட்டு மைதானத்தில் குழந்தைகளின் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது, மர்ம நபர் ஒருவர் விளையாட்டு மைதானத்துக்குள் கையெறி வெடிகுண்டை வீசியதில் ஒரு குழந்தை பலியானது.
* நேட்டோ படையில் இணைவது தொடர்பாக உக்ரைனில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 53 சதவீத மக்கள் நேட்டோ படையில் இணைவதற்கு ஆதரவாக வாக்களித்து உள்ளனர்.
* நேபாளத்தின் கைலாலி மற்றும் கஞ்சான்பூர் மாவட்டங்களில் பலத்த சூறாவளி தாக்கியது. இதில் அங்குள்ள பல்வேறு கிராமங்கள் சின்னபின்னமாகின. சூறாவளியில் சிக்கி ஒருவர் உயிர் இழந்தார். 37 பேர் காயம் அடைந்தனர்.
* நியூசிலாந்தின் காவ்கியா நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுக்கு, அங்கு தடை செய்யப்பட்ட தானியங்கி துப்பாக்கி பயன்படுத்தப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
* பிலிப்பைன்சில் போதை பழக்கத்துக்கு எதிரான போர் எனும் பெயரில் நடக்கும் சட்ட விரோத கொலைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், இதுதொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தி உள்ளது.