உலகைச் சுற்றி...

* கனடா தலைநகர் ஒட்டாவாவை சக்தி வாய்ந்த சூறாவளி தாக்கியது. இதில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சரிந்து விழுந்தன. வீடுகளின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன.
உலகைச் சுற்றி...
Published on

* அமெரிக்காவின் வெள் ளை மாளிகைக்கான பொருளாதார ஆலோசகர் கெவின் ஹாஸ்செட் விரைவில் பணி நீக்கம் செய்யப்படுவார் என ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

* ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அரசு ஊழியர்களை ஏற்றி சென்ற பஸ்சில் குண்டு வெடித்தது. இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

* வர்த்தக போர், தென் சீன கடல் பகுதி விவகாரம், தைவானுக்கு ஆதரவளிப்பது போன்ற காரணங்களால் அமெரிக்கா- சீனா இடையிலான உறவு சீர்குலைந்துள்ளது. இதனால் சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு படிக்க செல்லும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com