பிரேசிலில் கொரோனா உயிரிழப்பு 5 லட்சத்தை தாண்டியது : அதிபருக்கு எதிராக போராட்டம்

பிரேசிலில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது.
பிரேசிலில் கொரோனா உயிரிழப்பு 5 லட்சத்தை தாண்டியது : அதிபருக்கு எதிராக போராட்டம்
Published on

ரியோடி ஜெனிரோ,

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசிலில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிக அளவில் காணப்படுகிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் மூன்றாம் இடத்திலும் உயிரிழப்பு எண்ணிக்கையில் முதலிடத்திலும் பிரேசில் உள்ளது. தற்போது அந்நாட்டில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. உலக அளவில் ஏற்படும் தினசரி கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் தற்போது பிரேசில் தான் உள்ளது.

இந்த நிலையில், பிரேசிலில் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது. இதனால், அதிபர் ஜெய்ர் போல்சனரா பதவி விலகக் கோரி அந்நாட்டில் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். நாட்டின் தலைநகர் பிரேசிலியா உட்பட 26 மாகாணங்களிலும் போராட்டங்கள் நடக்கின்றன.

அதிபர் போல்சனரோவை பதவி நீக்கக்கோரி டிரம்ஸ்களை இசைத்து, கோஷங்கள் எழுப்பினர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ளவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அதிபர் மீது குற்றம் சாட்டியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com