

எல்லோருக்கும் சொர்க்கம் செல்ல வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. சொர்க்கத்துக்கு என்னால் வழிகாட்ட இயலாது என்பதால், சந்திரனுக்காவது அஸ்தியைக்கொண்டு செல்லலாம் என்று இந்த நிறுவனத்தை ஆரம்பித்திருக்கிறேன்.
சந்திரனை விரும்பாதவர்களே உலகில் இல்லை. அந்தச் சந்திரனில் சாம்பலைத் தூவுவதன் மூலம் அவர்கள் விருப்பத்தை நிறைவேற்ற இயலும் என்று நினைக்கிறேன். அதற்காக விண்வெளி நிறுவனமான அஸ்ட்ரோபோடிக் டெக்னாலஜியுடன் இணைந்து இந்தக் காரியத்தில் இறங்கியிருக்கிறேன் என்கிறார் தாமஸ்.