4 கார்களில் நிரப்பப்பட்ட பணத்துடன் நாட்டிலிருந்து வெளியேறிய அஷ்ரப் கானி; ரஷ்யா தகவல்

ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிய அதிபர் அஷ்ரப் கானி, கார்கள் மற்றும் ஹெலிகாப்டரில் கட்டுக்கட்டாக பணத்துடன் வெளியேறியதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
4 கார்களில் நிரப்பப்பட்ட பணத்துடன் நாட்டிலிருந்து வெளியேறிய அஷ்ரப் கானி; ரஷ்யா தகவல்
Published on

காபூல்,

ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிய அதிபர் அஷ்ரப் கனி, கார்கள் மற்றும் ஹெலிகாப்டரில் கட்டுக்கட்டாக பணத்துடன் வெளியேறியதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் ஆப்கானிஸ்தான் வந்ததை அடுத்து, அதிபர் அஷ்ரப் கானி, நான்கு கார்களில் கட்டுக்கட்டாக பணத்தை எடுத்துக்கெண்டு, ஹெலிகாப்டரிலும் பணக் கட்டுகளுடன் நாட்டை விட்டு வெளியேறி விட்டதாக, ரஷ்ய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தலிபான்கள் காபூலை சுற்றி வளைத்தபேது, அவர்களது தாக்குதலை சமாளிக்க முடியாது எனத் தெரிந்ததும், அங்கிருந்து அவர் தப்பியுள்ளார். ஓமனுக்கு அஷ்ரப் கனி தப்பிச் சென்றதாகவும் ரஷ்ய தூதரக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அஷ்ரப் கனியின் அலுவலகத்தில் மேலும் கட்டுக்கட்டாக பணம் இருந்தாலும், அதனை எடுத்துச் செல்ல முடியாததால் பணக்கட்டுகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com